ஆசையை தூண்டி பணம் பறிப்பு செயலி மூலம் பழகிய 15 பேர் கைது
கோவை, செப். 3- கோவையில், ஓரினச்சேர்க்கை ஆசையை தூண்டி, செல் போன் செயலி மூலம் பழகி பணம் பறித்த 15 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் கவரும் வகை யில் பல்வேறு ஆபத்தான செயலிகள் தற்போது பெருகிவிட் டன. இத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்து, சிலர் ஆபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, இளைஞர் கள், மாணவர்கள், ஏன் திருமணம் ஆன ஆண்கள் கூட “கிரிண்டர்” (Grindr) போன்ற செயலிகள் மூலம் நட்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். இந்த செயலிகள் மூலம் பழகும் நபர்கள், முதலில் நண் பர்களைப் போல் பேசி, பின்னர் ஓரினச்சேர்க்கை ஆர்வத் தைத் தூண்டுகின்றனர். அதை நம்பி, நேரில் சந்திக்க ஒப்புக் கொள்ளும் நபர்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடங் களுக்கு வரவழைக்கின்றனர். அங்கு, ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு மிரட்டி, பணம், நகை, செல்போன் ஆகிய வற்றை பறிக்கின்றனர். கூகுள் பே மூலமாகவும் பணத்தைப் பறிக்கின்றனர். இத்தகைய சம்பவங்கள் கோவை, சர வணம்பட்டி, பீளமேடு போன்ற பகுதிகளில் அடிக்கடி நடப்ப தாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டுமே புகார் அளிக் கின்றனர். பலர் அவமானம் கருதி புகார் அளிப்பதில்லை. புகார்களின் அடிப்படையில், இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
ஏற்றுமதி வணிக மேம்பாடு குறித்தான கருத்தரங்கம்
கோவை, செப்.3- கோவையில் எம்எஸ்எம்இ ஏற்று மதி வணிக மேம்பாடு குறித்தான கருத்த ரங்கில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், ஆவாரம் பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா கூட்டரங்கில் ஒன்றிய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் அமைச்சகம் சார்பில் ஏற்று மதி வணிக மேம்பாடு குறித்தான கருத்த ரங்கு நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. இதில், எம்எஸ்எம்இ-களுக்கான ஏற்றுமதி வணிக மேம்பாடு குறித்து பல்வேறு விஷயங்கள் எடுத்துரைக்கப் பட்டன. கோவை மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளை சார்ந்த பல்வேறு நிறு வனத்தினர் பங்கேற்று, ஏற்றுமதி வணிக மேம்பாடு குறித்து தெரிந்து கொண்ட னர். இந்த கூட்டரங்கில் தயாரிப்பு பொருட்களை ஆவணப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், வெளிநாட்டு சந்தைகளில், ஏற்றுமதி வாய்ப்புகள், ஒன்றிய அரசின் திட்டங்கள், இன்கோ (INCO) விதிமுறைகள், எப்டிபி திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத் துரைக்கப்பட்டன. மேலும் ஏற்றுமதியில் டிஜிட்டல் தளங்களின் பங்களிப்பு குறித் தும் விவரிக்கப்பட்டது. இந்த கருத்த ரங்கிக் டிஜிஎஃப்டி இணை அதிகாரி ஆனந்த் மோகன் மிஸ்ரா, எம்எஸ்எம்இ இணை இயக்குநர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.