1 லட்சம் கேபிள் இணைப்புகள் துண்டிப்பு
மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை
திருப்பூர், ஆக.21- திருப்பூரில் ஒரு லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் நள்ளிரவில் துண்டிக்கப்பட் டன. இதனால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இணைப்பைத் துண்டித்த வர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர் வாகிகள் உள்பட கேபிள் ஆப்ரேட்டர்கள் புதனன்று காலை மாநகரக் காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த னர். அவர்களிடம் புகார் மனுவைப் பெற அங் கிருந்த காவலர்கள் மறுப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கும்படி கூறி னர். எனினும் மாநகரக் காவல் ஆணையர் பெய ரில் மனு எழுதியிருப்பதால் ஆணையரிடம் அளிக்கிறோம், அத்துடன் காவல் நிலையங்க ளிலும் புகார் மனு அளிக்கிறோம் என ஆப்ரேட்டர் தரப்பினர் காவல் துறையினரி டம் தெரிவித்தனர். தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் எஸ்.பிரகாஷ் தலைமையில் ஆப் ரேட்டர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப் பதாவது: 19ஆம்தேதி மாலை 6 மணியளவில் திருப்பூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு சிக் னல் வழங்கும் முதன்மை அலுவலகமான காதர்பேட்டை பகுதியில் உள்ள கட்டிடத்தில் அடையாளம் தெரியாத நான்கைந்து நபர் கள் மாடியின் மீது ஏறிஅனைத்து கேபிள் வயர்களையும் துண்டித்துள்ளனர். அத்துடன் அதிகாலை 2.30 மணியளவில் பார்க் ரோடு, காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்ல டம் ரோடு, நடராஜா தியேட்டர் அருகில் என பல இடங்களில் வயர்கள் வெட்டப்பட்டுள் ளன. திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வருகிறோம் என்றும், அவருடைய நேர்முக உதவி யாளர் போன் நம்பரைக் கொடுத்து அவர்தான் துண்டிக்க சொன்னார். வேண்டுமென்றால் பேசிக் கொள்ளவும் என சொல்லிச் சென்றுள் ளனர். அவர்கள் கொடுத்த போன் எண்: 9486 475111. இதனால் ஏறத்தாழ 15 மணி நேரமாக திருப் பூர் மாநகர பகுதிகளில் கேபிள் டிவி ஒளிப ரப்பும், இணைய சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாதிரி யான சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாகக் கண்டுபிடித்து கடு மையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஒன்றிய அரசு லைசென்ஸ் பெற்று தொழில் நடத்தி வரும் தங்களுக்கு இந்திய அரசியல மைப்புச் சட்டம் கொடுத்துள்ள தொழில் செய் யும் உரிமையை சமூக விரோதிகளை ஏவி விட்டு தொழிலை அபகரிக்கப் பார்க்கின்ற னர். இதனால் எங்கள் குடும்பங்கள் வாழ்வா தாரமின்றி நிலைகுலைந்து போகும் நிலை ஏற் பட்டுள்ளது. அரசு கேபிள் விநியோகஸ்தர் என்று சொல்லிக் கொள்கிற சிட்கோ முதலிபா ளையம் பகுதியைச் சார்ந்த சூர்யா 7825011792 என்பவர்தான் தூண்டி விட்டு இந்த வேலை யைச் செய்கிறார் என்பது எங்களது சந்தேகம். எனவே அவர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் வாழ் வாதாரத்தைக் காத்திட வேண்டும். இனிமேல் இதுபோல் சமூக விரோத செயல்கள் நடைபெ றாதவாறு இருக்க மாநகரக் காவல் ஆணை யர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மற்ற துறைகளில் தனி யார் மயத்தை அனுமதித்ததை போல அரசு கேபிள் டிவி ஒளிபரப்பிலும் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளதாகவும், அந்த நிறுவ னத்தைச் சேர்ந்தவர்கள் அராஜகமாக அத் துமீறி கேபிள் டிவி இணைப்புகளை துண் டித்து வருவதாக கேபிள் டிவி ஆபரேட்டர் கள் குற்றம் சாட்டினர். மேலும் தனியார் இணைப்புகளைப் பெற்று கேபிள் டிவி சேவை வழங்கி வரும் ஆப்ரேட்டர்கள் குறைந்தது 50 சதவிகிதம் அரசு கேபிள் இணைப்புத் தர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் அரசு கேபிள் ஒளிபரப்பு தொடக்கத்தில் எச்.டி., தரம் கொண்டதாக இல்லை. எனவே தான் நாங்கள் அதில் இணைப்புப் பெற வில்லை. தற்போது தான் அரசு கேபிளில் எச்டி இணைப்பு கொடுக்கத் தொடங்கியுள் ளனர் என்று கேபிள் ஆப்ரேட்டர்கள் தெரி வித்தனர்.