tamilnadu

img

காஷ்மீரில் நிலம் வாங்கி வீடு கட்டுவேன்!

பனாஜி:
காஷ்மீர் மாநிலத்துக் கான சிறப்பு அந்தஸ்து, மோடி அரசால்  ரத்து செய்யப்பட்டு விட்டதன் காரணமாக, பிற மாநிலங்களைச் சேர்ந்தபெரு முதலாளிகள், ரியல்எஸ்டேட் அதிபர்கள் காஷ்மீரின் இயற்கை வளங்களைச் சூறையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 
பாஜக தலைவர்கள், இப்போதே காஷ்மீரில் தாங்கள் வளைக்கப் போகும் சொத்து குறித்து கனவுகாணத் துவங்கி விட்டனர்.இந்நிலையில், கோவா மாநில துறைமுகங்கள் துறைஅமைச்சரான மைக்கேல் லோபோ என்பவரும், தான் காஷ்மீரில் சொந்தமாக நிலம்வாங்கி வீடு கட்டி குடியேறப்போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “நான் காஷ்மீரில்நிலம் வாங்க திட்டமிட்டுள் ளேன். அங்கே ஒரு வீடு கட்டவிரும்புகிறேன். அரசியலில்இருந்து ஓய்வு பெற்றதும்அந்த வீட்டில் தங்கியிருக்கப்போகிறேன். அங்குள்ள எனது சட்டமன்ற நண்பர்கள்அனைவரையும் அழைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.பிரிவு 370 நீக்கத்தை வரவேற்று, கோவா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அப்போதுதான், மைக்கேல் லோபோ இவ்வாறு பேசியுள்ளார்.

;