tamilnadu

img

கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு

நவம்பர் மாதம் நடைபெற இருந்த  51 -ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்த  ஆண்டுக்கு   ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை சர்வதேசத் திரைப்பட விழா நடத்தத் திட்டமிடப்பட்டது ஆனால் கொரோனா நோய் தொற்று காரணத்தால் இதை நடத்துவதில் சிக்கல் இருந்தது.
இந்நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நேரடியாகவும் இணையம் வழியாகவும் இந்த விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது