tamilnadu

img

வாலிபர் சங்க ரத்த தான முகாம்

ஈரோடு, ஜூலை 29- நெல்லையில் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய் யப்பட்ட நெல்லை தோழர் அசோக் நினைவாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் சார்பில் ஞாயிறன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தாலுகா செயலாளர் சி.அஜித்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.பழ னிசாமி முகாமை துவக்கி வைத்தார். இதில், 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்த னர். பெருந்துறை அரசு மருத்துவமனை தலைமை மருத்து வர் பிரேம்நவாஸ், மருத்துவர் சாந்தி, ஈரோடு ரத்த வங்கி மருத்துவர்சசிகலா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.ஏ. விஸ்வநா தன், மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பி னர் சி.நவீன்குமார், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.ஸ்டாலின், தாலுகா கமிட்டி உறுப்பினர் வி.கே.வாசு தேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.