tamilnadu

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தருமபுரி, ஏப். 22-தருமபுரி மாவட்டத்தில் இருவேறு இடங்களில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தருமபுரி அடுத்துள்ள தடங்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட சவுளுபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்காததால் அப்பகுதி பொதுமக்கள் குடி நீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குடிநீர் பிரச்சனையைதீர்க்க வேண்டும் என சவுளுப்பட்டி பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் பொதுமக்கள் அளித்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சவுளுப்பட்டியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு தருமபுரி-சேலம்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்ததையடுத்து பெண்கள் களைந்து சென்றனர்.இதேபோல், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள் பி.பள்ளிப்பட்டியிலும் கடந்த இரண்டு மாதங்களாக சீரான குடி நீர் வழங்கவில்லை என  அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திங்களன்று அரூர்- சேலம் நெடுஞ்சாலையில் அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை விரைவில் தீர்ப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் களைந்து சென்றனர்.

;