கோவை, ஜூன் 22- யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் தண்ணீர் குடிக்க ஆனைகட்டி மூங்கில் பள்ளம் அருகே வனப்பகுதி யில் வனத்துறையால் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இத்தொட்டி சேதமடைந்து ஒரு வருடமாகியும் இன்னும் சீர மைக்காத காரணத்தால் யானைகள் ஆனைகட்டி பிரதான சாலையை கடந்து வந்து தண்ணீர் குடிக்க வேண்டிய அவலம் இன்றும் தொடர் கதையாக உள்ளது. அப்பகுதியில் தனியார் செங்கல் சூலை இயங்கி வருகி றது. இங்கு யானை மற்றும் பிற வன விலங்குகள் நுழைந்து தண்ணீர் அருந்திச் செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், வன பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் கூட்டம் சனியன்று மாலை 5:30 மணிக்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது, அவ்வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் நடுசாலையில் வாகனங்களை நிறுத்தி, புகைப்படம் எடுப்பது, சப்தம் மற்றும் கூச்சால் சத்தம் எழுப்புவது என யானைகளுக்கு இடையூறு செய்தனர். வனத்துறையினரின் அலட்சியம் காரணமாக யானை கள் மற்றும் பிற வன விலங்குகள் சாலையைக் கடக்கும் போது வாகனங்கள் மோதி உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து யானைகளையும் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.