tamilnadu

img

வி.பி. சிந்தன் நினைவு நாள் : தொழிலாளர்கள் ரத்த தானம்

திருப்பூர், மே. 8 - வி.பி. சிந்தனின் 33 ஆவது நினைவு நாளான வெள்ளி யன்று திருப்பூரில் சிஐடியு சார்பில் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் செய்தனர். தோழர் வி.பி. சிந்தன் நினைவு தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு ரத்த தானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளி யன்று தாராபுரம் சாலை திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் சிஐடியு சார்பில் ரத்த தானம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், சிஐடியு மாவட்ட நிர் வாகிகள் சி. மூர்த்தி, ஜி. சம்பத் உள்பட பல தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மொத்தம் 25 யூனிட் ரத் தம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு தானமாக வழங் கப்பட்டது.