tamilnadu

img

நடமாடும் அருங்காட்சியகம் ஈரோடு வருகை

ஈரோடு,செப். 6- அருங்காட்சியகத்தை பற்றி விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ கம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள நடமாடும் அருங்காட்சி யக பேருந்து ஈரோடு வந்துள்ளது. அருங்காட்சியகம் குறித்த மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை அரசு அருங்காட்சியகம் சார்பில் நட மாடும் அருங்காட்சியக பேருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் அருங்காட்சியக வாகனம் ஈரோடு வந்துள்ளது. இப்பேருந்து, ஈரோடு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்கிறது. தினமும் இரண்டு பள்ளி களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு அரசு அருங் காட்சியக பொறுப்பாளர் ஜென்சி கூறுகையில், அருங்காட்சியகத்தில் பழங்கால நமது வரலாறு,  கலாச்சாரம், சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன. அதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்பதற் காக நாடு முழுவதும் நடமாடும் அருங்காட்சியக பேருந்து சென்று வருகிறது. இதில்,  அக்பர், சந்திர குப்தர், குப்தர், இரண்டாம் சந்திர குப்தர் கால பழங்கால நாணயங்கள், நூற்றாண்டுகளை கடந்த பாறைகள், கனிம கற்கள், புதை படிமங்கள், சிந்து சமவெளி நாகரீகம் குறித்த பொருட் கள், தஞ்சாவூர் ஓவியம், ராஜாரவி வர்மா ஓவியம், பழங்கால சிற்பங்கள் போன்றவை உள்ளன. இந்த வாக னத்தில் உள்ள பழங்கால பொருட் களின் மினியேச்சர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.