tamilnadu

வால்பாறை: பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

பொள்ளாச்சி, ஜூன் 13- வால்பாறை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது.  நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் நோய் தீவிரமாக பரவி வரு கின்ற நிலையில்,  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்கான தடுப்பு மருந் தினை கண்டுபிடிப்பதற்கான, முயற்சி யில் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, கபசுர குடிநீர் தமிழகம் முழுவதும்  அனைத்து அமைப்பின ராலும், சில தன்னார்வலர்களாலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, வால்பாறை நகர் மற்றும் தேயிலைத் தோட்டப்பகு தியில் பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் கபசுர குடிநீர் பொடி இலவச மாக வழங்கப்பட்டு வருகிறது.  

இதுகுறித்து வால்பாறை நக ராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் கூறு கையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும், முதற்கட் டமாக 2,426 வீடுகளுக்கு கபசுர குடி நீர் பொடி வீடுகள் தோறும் வழங்கப் பட்டது. மேலும், விடுபட்ட அனைத்து இடங்களுக்கும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்படும். பொதுமக்கள் வெளியே செல்லும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் மக்கள் அனைவ ரும் தனி மனித இடைவெளியை கட் டாயம் கடை பிடிக்க வேண்டும் என கூறினார்.

;