tamilnadu

img

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்திய தேசத்தின் சிறப்பு- ஐஜி கே.பெரியய்யா

கோவை, ஜன. 19 –  வேற்றுமையில் ஒற்றுமை என் பதே இந்திய தேசத்தின் சிறப்பு என ஐஜி பெரியய்யா கோவையில் குறிப் பிட்டார். தமிழ்நாடு மத்திய மண்டல காவல் துறை தலைவர் அ.அமல்ராஜ் எழுதிய ’வெல்ல நினைத்தால் வெல்லலாம்’ என்ற நூல் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் வரவேற்றார். கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையேற்று பேசுகையில், அனைத்து நாடுகளையும் வெல் லும் வலிமையோ, கட்டியாளும் வலி மையோ வல்லரசுக்கான அடையா ளம் அல்ல. தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை  அழித்திடுவோம் என்றார் பாரதி. இல்லாமை என்று யாருமே இருக்கக் கூடாது என்பதே அதன் அர்த்தம். ஏறத்தாழ 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இன்னும் 30 சதவிகிதம் பேர் வறுமைக் கோட் டுக்குகீழ் வாழ்கின்றனர். அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு வருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்து, வறுமை யின்றி வாழ்வதே வல்லரசுக்கு இலக் கணமாகும். சாதிக்க வேண்டுமென்ற லட்சியம் மட்டுமின்றி, தேச நலனும், சமூகம் மீது அக்கறையும் கொண்ட இளைஞர்கள் அதிகம் உருவாக வேண்டும். ஒவ்வொருவருக்கும் சமூ கப் பொறுப்புணர்வு என்பது அவசி யம் என்றார்.
ஐஜி கே.பெரியய்யா
முன்னதாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா பேசுகையில், “1,500 க்கும் மேற்பட்ட மொழிகள், எண்ணற்ற மதங்கள், கலாச்சாரம், பண்பாடு இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்திய தேசத்தின் சிறப்பு. உலக நாடுகளில் மனித வளம் மிகுந்தது நம் நாடு. இதற்குக் காரணமாக இளை ஞர்களின் திறன்களைக் கண்ட றிந்து ஊக்குவித்தால், 2050 ஆம் ஆண் டுக்குள் உலகின் முதன்மையான வல்லரசாக இந்தியா உருவாகிவிடும். இந்தியாவின் சந்தையைக் குறி வைத்துதான் அத்தனை நாடுகளும் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கின்றனர். மிகப் பெரிய பன் னாட்டு நிறுவனங்களின் செயல் அதி காரிகளாக தமிழர்கள் பொறுப்பு வகிக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும் உயர்ந்த நிலையை அடைய, தகுதியை வளர்த் துக் கொள்ள வேண்டும். பள்ளி,  கல்லூரிகளில் இருந்தே தன்னம் பிக்கை, சுய முன்னேற்றப் புத்தகங்க ளைப் படித்து, வெற்றியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிவிட வேண் டும்” என்றார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி.நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ் ணன், பேச்சாளர் மகேஸ்வரி சற்குரு,  அரசு மருத்துவமனை டீன் அசோகன், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். முனைவர் சு.உஷாராணி விழா வைத் தொகுத்து வழங்கினார்.

;