சேலம், ஆக.23- சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள் ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சி பகுதிக்குட் பட்ட 3ஆவது வார்டில் உள்ள கேகே நகர் வடக்கு, காளியம்மன் கோவில் பகுதியில் கடந்த ஒரு வார மாக காவிரி குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் புழு, பூச்சிகள் உற்பத்தி யாகி துர்நாற்றம் வீசுவதாகவும், குடிநீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த குடிநீரை குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. எனவே சேலம் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சுகாதார மான குடிநீர் வழங்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.