tamilnadu

உதகை மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறை தீர் முகாம்

உதகை, ஜூலை 4- நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஜூலை 9 ஆம் தேதியன்று பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தேசிய அடையாள அட்டை மற்றும் நவீன யுடிஐடி வழங்கப்படும். மேற்படி அடையாள அட்டை மற்றும் விரிவான மருத்துவக் காப்பீடு எடுக்காத மாற்றுத்திறனாளிகள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகலுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் முகாமில் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்ட ஆட்சியர்் அலுவலகத்தில் ஜூலை 9ஆம் தேதியன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கட்டிட தொழிலாளி மரணத்தில் சந்தேகம் 

எஸ்பி அலுவலகத்தில் புகார்

ஈரோடு, ஜூலை 4- ஈரோடு அருகே கட்டடத் தொழிலாளரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் முறையிட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சென்னிமலை சாலை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவரது மகன் பாபு (29). இவருக்கும், அரச்சலூர் அருகே  உள்ள தாண்டாம்பாளையச் சேர்ந்த பிரபா (25) என்பவ ருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாபு கட்டிட வேலை செய்து வருகிறார். இந் நிலையில் கடந்த பத்து மாதங்களாக தகராறு காரணமாக தாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில்தான் அவர் இருக்க வேண்டும் என வலியுறுத்தி தாண்டாம் பாளையம் பகுதியில் தனிவீடு அமைத்து குடியமர்த்தினர்.  இந்நிலையில் செவ்வாயன்று காலை பெருந்துறையில் உள்ள பாபு வீட்டிற்கு ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகன் தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளனர். உடனே சம்பவ இடத் திற்கு விரைந்த பாபுவின் உறவினர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பாபுவின் உடலில் இடுப்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டு அதிகமாக ரத்தம் வெளியேறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாபுவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபுவை அவரது மாமனார் உள்ளிட்ட உறவினர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இதற்கிடையில், சிவகிரி காவல்துறையினர் தற் கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ள னர். மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு அறிக்கை வருவதற்கு முன்பாகவே காவல்துறை எவ்வாறு தற்கொலை  செய்து கொண்டார் என வழக்கு பதிவு செய்ய முடியும் என ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத் திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
 

;