tamilnadu

உதகை மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு

மண்டல அலுவலர்கள் கள ஆய்வு

உதகை, மார்ச் 6- நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வியாழனன்று மண்டல அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூட லூர், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்ட லங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களின் உபயோகத்தை தவிர்ப்பது, பொது இடங்க ளில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வியாழனன்று மண்டல அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நக ராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலு வலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் துணை ஆட்சி யர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் ஆய்வின் போது, தடை செய்யப் பட்ட 4500 கிலோ கிராம் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, ரூ.43,450 அபரா தமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்க ளும், சுற்றுலா மற்றும் வெளியூர் பயணிக ளும் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை உபயோகிப் பது மற்றும் பொதுயிடங்களில் குப்பை கொட் டுவதை தவிர்த்து சுற்றுசூழலை பாதுகாக்க  வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார்.

நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாகக் கூறி மோசடி

ஊழியர் மீது வழக்கு 

ஈரோடு, மார்ச் 6- ஈரோடு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவ தாக மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர்  மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள் ளனர். ஈரோடு அருகே வைராபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முரளிமுருகன். இவர்  கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வரும் ரோஸ் நிதி நிறுவனத்தின் ஈரோடு கிளை  மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவ னத்தில் வசூல் பிரிவில் ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34) என்பவர் பணியாற்றி வருகி றார். இவர் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை வசூல் செய்து நிதி நிறுவனத்தில் செலுத்தி வந்துள் ளார். இந்திலையில், பொதுமக்கள் பலர் பணம் கட னாக வேண்டும் என ராஜேஷ் கண்ணனிடம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்கனவே வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக கடன் பெற்று தருவதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தாங்கள் வாங்கிய கடனை செலுத்தியுள்ளனர். இதில், ரூ.46 ஆயிரத்து 436 பணம் வசூலானது. இந்த பணத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் ராஜேஷ் கண்ணன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஈரோடு குற்றவியல் நீதித்துறை  நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கருங்கல்பாளையம் காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கருங்கல்பாளையம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மது விற்பனை - 3 பேர் கைது  

ஈரோடு, மார்ச் 6- ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி யில் காவல் துறையினர் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்ப குதி சந்தைக்கடை பின்புறம்  உள்ள மதுபா னக்கடை அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புளி யம்பட்டி சமன்தூர் சிறுமுகை பகுதியைச்  சேர்ந்த தங்கராஜ்(34), திருப்பூர் மாவல் டம், பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த  துரைச்சாமி (52) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 34 மதுப்பாட் டில்களை பறிமுதல் செய்தனர்.  இதேபோல், பவானிசாகர் சாலை  பொன்னம்பாளையம் பகுதியில் காவல்  துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மது விற்பனையில் ஈடுபட் டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு டியைச் சேர்ந்த சுதாகர்(22) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்- காவல்துறை விசாரணை

தருமபுரி, மார்ச் 6- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அடுத்துள்ள தாளநத்தம் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவியை, புட்டிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அஜித் (21) என்ற இளைஞர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை ராமியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த  சிறுமி அஜித் என்பவர் பாலியல் தொந்த ரவு செய்துள்ளார் என்பதை தந்தை யிடம் கூறினார். இதுகுறித்து கடத்தூர் காவல் நிலையத்தில் அஜீத் மீது பள்ளி மாணவியின் தந்தை புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

;