tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இருவர் கைது

கோவை, பிப். 9– கோவை மற்றும் அவிநாசியில் போக்சோ சட்டத் தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.  சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (46). இவர் கோவையில் உள்ள ஒரு மரகுடோனில் வேலை செய்து வருகிறார். அதே குடோனில் 5 வயது சிறுமி யின் பெற்றோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலை யில், பெற்றோர் சிறுமியை விளையாட விட்டு விட்டு வேலை செய்து வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஆனந்த் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால், சிறுமி அழும் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். அப் போது ஆனந்தின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். உடனடியாக சிறுமியை மீட்டு பெற்றோர் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த னர். இதனையடுத்து காவல் துறையினர் அப்புகாரின் பேரில் விசாரணை நடத்தி ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்த னர்.
   அவிநாசி
அவிநாசி அடுத்த செம்பாக்கவுண்டம்பாளையத்தில் இளம் பெண்ணை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் ஞாயிறன்று கைது செய்தனர். அவிநாசி பட்டறை, செம்பாக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுக்கு உள்பட்ட சிறுமி கடந்த வெள்ளியன்று அவிநாசி சென்று வருவதாகக் கூறிச் சென் றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் அவரைத் தேடிவந்தனர். இந்நிலையில் பவானிசாகர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக அறிந்த பெற்றோர் மாணவியை மீட்டு அவி நாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை யில், நம்பியூர் எம்மாம்பூண்டி, ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பூத்தான் மகன் முத்துக்குமார் (22) ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அவிநாசி போலீசார், முத்துக்குமாரை கைது செய்தனர்.