tamilnadu

திருப்பூர் , அவிநாசி முக்கிய செய்திகள்

பாம்பு கடித்து பெண் பலி

திருப்பூர், செப். 24- வெள்ளக்கோவில் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்.  திருப்பூர் மாவட்டம், மூலனூர், சாணார்பாளை யம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பன் மனைவி குப்பம்மாள் (54). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் சனியன்று காளிபாளை யத்தில் உள்ள செல்லமுத்துவின் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துவிட்டது. கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட குப்பம்மாள் திங்களன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதுகுறித்து மூலனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு கிராம வங்கிக் கிளை திறப்பு

திருப்பூர், செப். 24- பல்லடம் அருகே அருள்புரத்தில் தமிழ்நாடு கிராம வங்கிக் கிளை திறப்பு விழா திங்களன்று நடைபெற் றது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்பு தூர் ஊராட்சி அருள்புரத்தில் தமிழ்நாடு கிராம வங்கிக் கிளை திறப்பு விழா நடைபெற்றது. வட்டார மேலாளர் ஜெயக்குமார் தலைமையில் வங்கிக்  கிளையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திட்ட இயக்குநர், 631 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கியானது தமிழகத்தின் 5ஆவது பெரிய வங்கியாகும். இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, கிளை மேலாளர் கவிதா,  நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜு, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பானுப் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  வங்கி துணை மேலாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அன்பு  இல்லம் நிறுவனர் கைது

திருப்பூர், செப். 24– மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில்  தலைமறைவான அன்பு இல்ல நிறுவனர் ராஜசேகர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் அன்பு இல்லத்தின்கீழ் விவேகானந்தா குருகுலம் உயர்நிலைப்  பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் வசதியற்ற குழந்தைகள் அங்கேயே தங்கிப் படித்து வந்தனர். ஆறு முதல் 10ஆம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 62 மாணவர்கள் படித்து வந்தனர். இந்நிலையில் அன்பு இல்லத்தின் நிறுவனர் ராஜசேகர் (50) மாணவர்களிடம் தகாத முறையில் நடப்பதாகத் திருப்பூர் மாவட்ட குழந்தை கள் நலக்குழுவிற்கு பெற்றோர் புகார் அளித்தனர்.  இதைத் தொடர்ந்து இப்பள்ளியில் திருப்பூர் தெற்கு தாசில்தார் மகேஸ்வரன், வேலம்பாளை யம் வருவாய் ஆய்வாளர் சரவணன், பொங்குபாளை யம் கிராம நிர்வாக அலுவலர் காந்திமதி, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி பிரேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சிறுவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் நிறுவனர் ராஜசேகர் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரியவந்தது.  இதையடுத்து இங்கு தங்கிப் படித்த மாணவர் களை வேறு இடத்திற்கு மாற்றினர். மாவட்ட குழந்தை கள் நலக்குழு சார்பில் ராகுல் என்பவர் பெருமாநல் லூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத் தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர். இந்நிலையில், தலைமறைவான அன்பு இல்லத்தின் நிறுவனர் ராஜசேகரை காவலர்கள் கைது செய்துகோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வீரதீர செயல்களுக்கான விருது

திருப்பூர், செப். 24-  குழந்தைகளுக்கான வீரதீர செயல்களுக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.  அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு சிரமத்திற்குள் ளானவர்களின் பிரச்சனைகளை, ஜீலை-2018 முதல் ஜீன்-2019 வரையிலான காலங்களில்  முதல் தகவல் களாக காவல் நிலைய கவனத்திற்குக் கொண்டு சென்று பதிவு செய்திருந்தாலோ,  குழந்தைகள் கல்வி மேம்பாடு அல்லது விபத்துக்களிலிருந்து யாரை யாவது காப்பாற்றி இருந்தாலோ, அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது. அவற்றிற்கான ஆதாரத்துடன் மேற்காணும் விருதிற்கு 6 வயது முதல் 18 வயதிற்குள் உள்ளவர்கள் 30.09.2019-க்குள் திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்திட மாவட்ட  ஆட்சியர்  அலுவலக செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பட்டா பெற்றுத் தருவதாக மோசடி செய்ததாக சமூக அமைப்பு நிர்வாகியிடம் பெண்கள் வாக்குவாதம்

திருப்பூர், செப். 24 – திருப்பூரில் வீட்டுமனைப் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக சமூகஅமைப்பின் நிர்வாகியிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை யின் நிறுவனராக இருப்பவர் அ.சு. பவுத்தன். இவர் திங்களன்று மாவட்ட  ஆட்சியரகத்துக்கு வந்திருந்தார். அங்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக பொது மக்கள் பலர் வந்திருந்தனர். அங்கிருந்த பெண்கள் சிலர் திடீரென அ.சு.பவுத்தனை முற்றுகையிட்டு  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீட்டு மனைப்  பட்டா வாங்கித் தருவதாக பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்கள் புகார் கூறினர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப்  பணி யில் இருந்த காவலர்கள் அவர்களை சமரசம் செய்து வைத்து அனுப்பி வைத் தனர். அதேசமயம் பொங்கலூர் பெரியார் நகர் அழகு செல்வி என்பவர் தன்னை  ஆட்சியரகத்தில் இழிவு செய்ததாக பவுத்தன் தெற்கு காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார்.

மக்காச்சோளப் பயிரிட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

அவிநாசி, செப். 24- அவிநாசி பகுதியில் மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுவை கட் டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண் துறையினர் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து அவிநாசி வேளாண் துறையினர்  வெளியிட்டுள்ள கூறி யிருப்பதாவது: அவிநாசி சுற்றுப்புற பகுதியில் விவசாயிகள் பலர், மக்காச் சோளம் பயிரிட்டு வருகின்றனர். கோடை உழவில் மண்ணில் உள்ளகூட்டுப் புழுக்களை அழிப் பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண் டும். பல நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்கு தல் அதிகளவில் இருக்கும். விதைப் பின்போது, அதோடு வயல் ஓரங்க ளில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரிய காந்தி, சாமந்திப்பூ ஆகிய வற்றை விதைப்பதன் மூலம் பூச்சி  தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். எனவே, அனைத்து விவசாயிக ளும் ஊடுபயிர் மற்றும் வயல் ஓரப் பயிர் சாகுபடி மேற்கொள்ள வேண் டும். விதைத்த ஒரு வாரம் முதல் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளி யில், வயல் முழுக்க இலையின் மேல் அல்லது அதன் பின் காணப்படும் முட்டை குவியல், இளம்புழு கூட் டங்களை அழிக்க வேண்டும். மேலும் தோட்டத்தில் இனக்கவர்ச்சிப் பொறி வைக்க வேண்டும். சோளப்பயி ரில் வேப்பஎண்ணெய் கரைசல் தெளித்தால், தாய் அந்துப்பூச்சி பயிரில் முட்டையிடுவதை தவிர்க்க முடியும். பூச்சிகளை கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் தெளிக்க வேண்டும் என வேளாண் துறையினர் கூறியுள்ளனர்.

பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க செப். 28 வரை அவகாசம் நீட்டிப்பு

திருப்பூர், செப். 24 – திருப்பூர் மாநகர காவல் எல்லை தவிர்த்த மாவட்டத் தின் பிற பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்து வதற்கு செப்டம்பர் 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆகஸ்ட் 31 வரை இணையவழி விண் ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த புதிய நடைமுறை தெரியாததால் கூடுதல் கால அவ காசம் வழங்குமாறு வணிகர்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்தது. எனவே தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 28ஆம் தேதி வரை கால நீடிப்பு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

ரயில் மோதி ஒருவர் பலி

திருப்பூர், செப். 24- திருப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரவீந் திரன் (58). இவர் ஊத்துக் குளி சாலையில் உள்ள ரயில் பாதையைக் கடக்க முயன்ற போது, ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலி யானார். இதுகுறித்து காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகின் றனர்.

;