tamilnadu

திருப்பூர் , அவிநாசி ,தாராபுரம்முக்கிய செய்திகள்

அதிமுகவின் ஊழல் நிர்வாகம்:  மாணிக்காபுரம் கூட்டுறவு இயக்குநர்கள்  பதவி விலகலின் பின்னணி

திருப்பூர், ஜூலை 2 - மாணிக்காபுரம் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் நான்கு பேர் பதவி விலகியதற்கு, அதிமுக ஊழல் நிர்வாகமே காரணம் என்று தெரிய வந்துள்ளது. திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சிக் குட்பட்ட மாணிக்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தல் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சியை சேர்ந்த 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மட்டும்  ஏற்கப்பட்டதாக அறிவித்தனர். மொத்த  இயக்குநர் எண்ணிக்கை 11 என்பதால்  அதற்கேற்ப அதிமுகவினர் பெரும்பான் மையாக இருக்கும்படி 7 பேர், திமுக 2,  மார்க்சிஸ்ட் 1, தமாகா 1 என திட்ட மிட்ட முறையில் ஏற்கப்பட்டதாக அறி வித்து மற்றவர்களின் மனுக்களை எவ் வித பரிசீலனையும் இல்லாமல் நிராகரித்து விட்டனர். இதில் குறிப்பாக திமுக முன்னாள் ஊராட்சிமன்றத்  தலைவராக செயல்பட்ட விஸ்வலிங்கசாமியின் மனுவும் நிராக ரிக்கப்பட்டது. ஏற்கெனவே மாணிக்கா புரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகளாக அதிமுகவினரே  இருந்த நிலையில்,  ஊழல் காரணமாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வரு கிறது. அந்த விசாரணையும் முடிவடையாத நிலையில், மீண்டும் அதிமுகவினரே தேர்தல் முறைகேடு செய்து கூட்டுறவு நிர்வாகத்தைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்தது சங்க  உறுப்பினர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத் தியது. இந்நிலையில் விஸ்வலிங்கசாமி இந்த  முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த  வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண் இயக் குநர்கள் உள்ளிட்ட நான்கு பேரின் பதவி களை தவிர்த்துவிட்டு, மற்ற அதிமுகவினர் ஏழு பேருடன், விஸ்வலிங்கசாமியின் வேட்புமனுவையும் ஏற்று தேர்தல் நடத்தும்படி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அப் போதும் முறைகேடு செய்து அதிமுக வினர் தேர்தலில் வெற்றி பெற முயற்சித்த நிலையில் இத்தேர்தலைப் புறக்கணிப்ப தாக அனைத்துக் கட்சியினர் கூறி விட்டனர். எனவே 1850 உறுப்பினர்கள் உள்ள இந்த சங்கத்தில் 185 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதில் ஏற்கெனவே சொன்னதுபோல் மீண்டும் ஏழு அதிமுக வினர் உள்பட 11 பேரை தேர்வு செய்ததாக அறிவித்துவிட்டனர்.  இந்த நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நான்கு இயக்குநர்கள் பதவியில்  நீடித்தால், அதிமுக நிர்வாகம் மேற் கொள்ளும் முறைகேடு, ஊழல் நடவடிக்கை களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று கருதிய நால்வர் ஜூலை 1ஆம் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஏற்கெனவே முந்தைய நிர்வாகத்தின் மீதான துறைரீதியான விசாரணை நடத்தி  அதில் குற்றமிழைத்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், அத்துடன்  தற்போது முறைகேடாக தேர்ந்தெடுக் கப்பட்ட அதிமுக நிர்வாகத்தினர் மீதும்  வழக்குத் தொடுக்க இருப்பதாக எதிர்க் கட்சியினர் தெரிவித்தனர். 

கிளை நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்றிடுக திருமுருகன்பூண்டி வாசகர்கள் கோரிக்கை

அவிநாசி, ஜூலை 2- அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டி உள்ள கிளை நூலகத்தை, முழு நேர நூலக மாக மாற்றியமைக்க வேண்டுமென வாச கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அவிநாசி ஒன்றியம், திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் அரசு கிளை நூலகம் 1965 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த நூலகத்தில் 27 ஆயிரத்திற்கு மேற் பட்ட புத்தகங்கள் உள்ளன. இப்புத்த கங்கள் பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் பயன்படுத்து கின்றனர். நூலகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள னர். இந்த நூலகத்திற்கு தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட வாசகர்கள் படித்து பயன் பெற்று வருகின்றனர்.  நூலகம் காலையில் 9 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை பகுதிநேர நூலகமாக செயல்படுகின்றது.  இதுகுறித்து வாசகர்கள் தெரிவிக் கையில், இந்த நூலகத்தில் இடப் பற்றாக்குறை நிலவி வந்தது. தற்போது சரி செய்யப்பட்டு அதிக வாசகர்கள்  படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  நூலகத்திற்கு சில தனியார் தொண்டு  நிறுவனங்கள் புத்தகங்கள் இலவசமாக கொடுக்கின்றன. இதனால் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வரு கின்றன. எனவே, முழு நேர நூலகமாக இயங்குமாறு அவிநாசி ஒன்றிய நிர்வா கமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை

தாராபுரம், ஜூலை 2 - தாராபுரம் அடுத்த கொட்டமுத்தாம் பாளை யத்தை சேர்ந்தவர் விவ சாயி வீரக்குமார் (29). இவ ருக்கு அதே ஊரை சேர்ந்த முருகவேணிக்கும் 3 ஆண்டு களுக்கு முன்பு திருமணம்  நடைபெற்றது. இந்நிலை யில் கணவன் மனைவிக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 1 மாதத் திற்கு முன்பு முருகவேணி தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். வீரக்குமார் நேரில் சென்று அழைத்தும் முருக வேணி வரவில்லை. இதைய டுத்து மனமுடைந்த வீரக் குமார் வீட்டில் யாரும் இல் லாதபோது பூச்சிமருந்தை குடித்துவிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து  அலங்கியம் காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.