tamilnadu

img

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் பள்ளியில்லாததால் குழந்தைகள் ஆடு மேய்க்கும் அவலம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள எ.என்.பாளையம் வனசரகத் திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியின் மையத்தில் விளாங்கோம்பை என்னும் பழங்குடியின மக்கள் கிராமம் அமைந் துள்ளது. இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 300க்கும் மேற் பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்திற்குச் செல்ல குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வன பாதை வழியாக 8கிலோ மீட்டர் தூரம் நடந்தால் கிராமத்தை அடைய லாம். வழியில் மூன்று இடங்களில் காற்றாற்று பள்ளத்தை கடந்து செல்ல வேண்டும்.  இந்நிலையில் விளாங்கோம்பை மலை வாழ் மக்கள் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிப் பறிவே இல்லாமல் உள்ளனர்.

இவர் கள் பள்ளிக்கூடம் சென்று படிக்க வேண்டும் என்றால், குண்டேரிப்பள் ளம் அருகில் உள்ள வினோபா நகரில் செயல்படும் அரசு ஆரம்பப்பள்ளிக் குச் சென்றுதான் படிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. விளாங்கோப் பையிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று படிக்க முடியாமல், இக்குழந்தைகளின் கல்வி ஆரம்பத்தி லேயே கிள்ளி எறியப்படுகிறது. அத னால் விளாங்கோம்பை கிராமத்தில் உள்ள குழந்தைகள் கல்வி அறிவில்லா மல் மலைப்பகுதியில் விளையாடி வருகின்றனர்.  இங்கு  குழந்தை தொழிலாளர்களை மீட்டு கல்வி வழங்க தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட சிறப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இங்கு  குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த  இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியும் மத்திய அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருசில மாணவ, மாணவிகள் மட்டும் வினோபா நகர் பள்ளிக்குச் சென்று எட்டாம் வரை மட்டுமே படித்து விட்டு மேல் படிப் பிற்கு வாய்ப்பில்லாமல் உள்ளனர். இதில் சிலர் ஆடுகள் மேய்த்துக் கொண் டும், பனியன் கம்பெனி விடுதிகளில் தங்கிப் பணியாற்றியும் வருகின்றனர். மாணவர்கள் போர்வெல் இயந்திர பணிக்கும், கட்டிட வேலைக்கும் சென்று வருகின்றனர்.

 இந்நிலையில், விளாங்கோம்பை கிராமத்திற்கு அரசு ஆரம்பப்பள்ளி அமைத்துத் தரவேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களது கோரிக்கைக்கு நிலம் கொடுங்கள் பள்ளி அமைத்துத் தரு கிறோம் என அரசு நிலம் கேட்டதால், கிராம மக்கள் நிலத்தைப் பள்ளிக் காக வழங்கியுள்ளர். எனினும் பள்ளிக் கான அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் முடிவுற்று மூன்று ஆண்டுகள் ஆகியும், பள்ளிக்கான கட்டடம் அமைக் கும் எந்த அறிகுறியும் இல்லை.  இதற்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொகு தியில் உள்ள மலைக்கிராமத்திற்கு ஆரம்பபள்ளி ஏற்படுத்தவில்லை என மலைவாழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஒரு கிலோ மீட்ட ருக்கு ஒரு ஆரம்பப்பள்ளி அமைக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருந் தும் எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளி அமைக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ரேசன் பொருட்கள் வாங்கவும், எட்டு கிலோ மீட்டர் தூரமுள்ள வினோபா நகர் செல்ல வேண்டியுள்ளதாகவும், அடர்ந்த வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில், பல முறை யானைகளிடம் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு தரைப்பாலங்கள் அமைத்து தார் சாலை போடப்பட்டதாகவும், அச் சாலை 2010ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங் கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் சாலை அமைத்துத் தர அரசு முன்வரவில்லை என்றும், மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். காற்றாறுகளைக் கடக்காமலும், எவ் வித பாலங்கள் அமைக்காமலும், 4 கிலோ மீட்டரில் சாலை அமைக்க மாற்று வழி உள்ளதாகவும், அவ்வழி யில் சாலை அமைக்க வனத்துறை அனுமதி மறுக்கப்படுவதாகவும் அப்ப குதி மக்கள் வேதனை தெரிவித்துள் ளனர். இது குறித்து அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையனிடம் கேட்டபோது, சாலை வசதி இல்லாததினால் பள்ளி கூடம் அமைப்பதில் சிரமம் ஏற்பட் டுள்ளது. சாலையை மேம்படுத்த தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. சாலை சீரமைப்புப் பணிகள் முடிந்தவுடன் பள்ளிக்கூடம் கட்டும் பணி நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார். - (ந.நி.)

;