tamilnadu

ஈரோடு முக்கிய செய்திகள்

மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் மனு

ஈரோடு, மே 5-வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை மீட்டுத் தரக்கோரி அவரது கணவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தார்.ஈரோடு மாநகரில் கருங்கல்பாளையம் அருகே உள்ள கே.ஏ.எஸ். நகரைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (48). இவரது மனைவி யாஸ்மின் (45). இவர்களுக்கு சமீன் (29) என்ற மகளும், நாஜிருல்லா(28) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நவாஸ்கான் தனது அக்கா மகன் நிஜாமின் பரிந்துரையின்படி மனைவியை குவைத் நாட்டில் வீட்டு வேலைக்காக கடந்த ஜனவரி மாதம் அனுப்பி வைத்தார். நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி யாஸ்மின் செல்போனில் தொடர்பு கொண்டார்.அங்கு தான் கொடுமைப்படுத்தப்படுவதாகும், கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றி சித்திரவதை செய்யப்படுவதாகவும், ஊதியம் கேட்டால் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து அடித்து உதைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தன்னைகாப்பாற்றுமாறு கூறியவாறு இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நவாஸ்கான் தனது மனைவியை பத்திரமாக மீட்டுத் தரக் கோரி மகன் சமீனுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார்.


கழிவுகளை வெளியேற்றிய சாய பட்டறைகளுக்கு சீல்

ஈரோடு, மே 5-ஈரோடு பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் கழிவு நீரை வெளியேற்றிய 3 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.ஈரோடு ப.பெ.அக்ரஹாரம் மற்றும் அசோகபுரம் பகுதிகளில் இருந்து பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியஅதிகாரிகள் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புசெய்யாமல் வெளியேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள ஒரு சாயப்பட்டறை மற்றும் இரண்டு சலவைப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

;