tamilnadu

நெல்லையில் 21 பேருக்கு கொரோனா தனியார் நகைக் கடைக்கு சீல்

திருநெல்வேலி,  ஜூன் 13- நெல்லை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நெல்லை மாவட் டத்தில் கொரோனா தொற் றுக்கு 446 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். நெல்லை மாநகர பகுதிகளில் 10 பேரும்  புறநகர் பகுதிகளில் பதி னோரு பேரும் இந்த தொற் றுக்கு ஆளாகி உள்ளனர்.  சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த வர்கள் மூலமாக இந்த தொற்று பரவி உள்ளது. மேலும் நெல்லையில் பிரபல தனியார் நகை கடையில் உள்ள ஊழியர் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்தக் கடையில்  பணிபுரிந்த 32 ஊழியர்க ளுக்கு பரிசோதனை நடை பெற்றது. இதில் ஆறு பேருக்கு சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து அந்த கடைக்கு மாநகராட்சி அதி காரிகள் சீல் வைத்தனர். ஊழியர்களுக்கு கொ ரோனா தொற்று பரவியதை  அடுத்து வாடிக்கையாளர்க ளுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்றும் முறையான  பாதுகாப்பு அம்சங்கள் அந்த  கடையில் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் சிப்பந்திக ளுக்கு அன்றாடம் செய்யப்ப டும் முறையான பரிசோதனை கள் எதுவும் செய்யப்பட வில்லை எனவும் மாநகராட்சி  நிர்வாகம் குற்றம் சாட்டி உள்ளது.  மேலும் கடை முழுவதும்  கிருமிநாசினி கொண்டு தொற்று நீக்கம் செய்யப்ப டவில்லை எனவும் சிப்பந்தி கள் தங்கும் அறை முறை யாக தொற்று நீக்கம் செய்யப் படவில்லை என காரணம் காட்டி மாநகராட்சி நிர்வாகம் ஜூன் 15 வரை கடையை மூட உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் தனியார் நகைக்கடை முன்பு மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டினர். மேலும் தனியார் நகைக்கடையை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.