tamilnadu

img

வேட்புமனுத் தாக்கல் அதிமுகவினரின் விதிமீறல் துவங்கியது

அவிநாசி,டிச.12- அவிநாசியில் பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் அதிமுகவினர் வேட்புமனு தாக்கல்  செய்ய விதியை மீறி பேரணியாக  சென்றதுடன், தடுத்த போலீஸா ருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.   தமிழகத்தில் ஊராட்சி மன்றத்  தேர்தல் டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் இரு கட்டங் களாக நடைபெற உள்ளது . இந் நிலையில் அவிநாசி ஒன்றிய பகு தியில் டிசம்பர் 30ஆம் தேதி 31 தேதி ஊராட்சி, 19 ஒன்றிய கவுன் சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன் சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல்  நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து பழங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு  போட்டி யிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர் வாகியான செந்தில் என்பவரின் தங்கை கோமதிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சேவூர் சாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க 300 பேருடன் பேரணியாக வந்துள்ளனர். இதனால் போக்கு வரத்து இடையூறு ஏற்பட்டு வாகன  ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளா கினர். 

இதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்ற அவர் களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 5 நபர்களுடன் மட்டும் தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினர். இதற்கு  அதிமுக பிரமுகர் செந்தில் தலை மையில் வந்த அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும்  கும்பலாக உள்ளே நுழைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து காவல்துறை ஆய் வாளர் தலைமையிலான காவ லர்கள்  ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் இருந்து அதிமுகவினரை அப்புறப்படுத்தினர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், தேர்தல் துவங்கும் முன்பே  தேர்தல் விதி மீறலில் அதிமுகவினர் ஈடுபட துவங்கிவிட்டனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறுமா என்பது சந் தேகம்தான் என தங்களது ஆதங் கத்தை வெளிப்படுத்தினர்.  

;