tamilnadu

img

முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை

ஈரோடு, நவ. 9- பவானிசாகர் அணை வெள்ளி யன்று நள்ளிரவில் முழு கொள்ளள வான 105 அடியை எட்டியதையடுத்து அணைக்கு வரும் 23  ஆயிரம் கனஅடி தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு அடுத்தப்படி யாக தமிழகத்தில் 2 ஆவது பெரிய  அணையாக பவானிசாகர் அணை  உள்ளது. 120 அடி கொள்ளளவு  கொண்ட இந்த அணையில் 105 அடி  வரை தண்ணீரை சேமிக்க முடியும்.  கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகு தியில் பெய்து வரும் மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிக ரித்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர் மட்டம் 102 அடியை தாண்டியது. இதனால் முழு கொள்ள ளவான 105 அடியை எட்டும் நிலை யில் இருந்தது. இந்த நிலையில் வெள்ளியன்று 104.74 அடியாக இருந்த பவானிசாகர் அணை நள்ளிர வில் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டுள்ளது.  இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நள்ளிரவு முதல் அணை திறக் கப்பட்டது. அணைக்கு வரும் 23 ஆயி ரம் கனஅடி தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப் பட்டுள்ளது. தற்போது உபரி நீர் திறப்பு குறைவாக இருந்தாலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பவானி ஆற்று கரையோர பகுதி மக்கள் பாது காப்பாக இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

;