tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கல் 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி யின் தலைவராக தொடர்ந்து இரண்டு முறை பணியாற்றியவர் திமுகவைச் சேர்ந்த என்.அசோக்குமார். இவர் கொரோனா தடுப்புப் பணி யில் முன்னின்று அயராது பணியாற்றிய, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் 70 க்கும் மேற்பட்டோ ருக்கு, ரொக்கப் பணம் தலா 500 மற்றும் ரூ 1000, அரிசி, மளிகைப் பொருட்கள் என மொத்தம் ரூ 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பி லான நிவாரணப் பொருட்களை, திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் வழிகாட்டுதலின்படி வியாழக்கிழமை வழங்கினார். திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் மஜீத், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன், துப்புரவு மேற்பார்வையாளர் வீரமணி, சிவசுப்பிரமணியன் உடனிருந்தனர்.

நிவாரண நிதி வழங்கல்

தஞ்சாவூர்: கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக ளுக்காக, தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவல் நிலைப் பணியாளர்களின் 2020 ஏப்ரல் மாதம் ஒரு நாள் ஊதியத் தொகை ரூ.5,82,156 முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது என பல்கலைக்கழக பதிவாளர்(பொ) கு.சின்னப்பன் தெரிவித்துள்ளார்.