வியாபாரிகள் நெருக்கடி: கண்ணீரில் கண்வலி விவசாயிகள்
தாராபுரம், செப். 17 - தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் வியாபாரி களின் நெருக்கடி காரணமாக கண்வலி விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் மற்றும் கன்னி வாடி பகுதியில் விவசாயிகள் கண்வலியை சாகுபடி செய்து கடந்த மார்ச் மாதம் அறுவடை செய்தனர். அறுவடை செய்த கண்வலி விதையை பதப்படுத்தி விற்பனைக்குத் தயார் செய்தனர். ஆனால் விலை நிர்ணயம் செய்ய எந்த கொள்முதல் நிறுவனமும் முன்வரவில்லை. இதனால் கண்வலி விதையை இருப்பு வைத்திருந்தனர். இதையடுத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் கூட்டம் நடத்தி கண்வலி விதையை கிலோ ரூ.2ஆயிரத்து 500க்கு விற்பது என முடிவு செய்தனர். ஒரு ஏற்றுமதி நிறுவ னம் சார்பில் இந்த விலைக்கு கொள்முதல் செய்வ தாக அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தி டம் விவசாயிகள் பதிவு செய்தனர். ஆனால் அந்த ஏற்றுமதி நிறுவனம் இரண்டு மாதம் கழித்துதான் கொள்முதல் செய்ய இயலும் என அறிவித்தது. இதை யடுத்து மற்ற நிறுவனங்கள் சார்பில் கண்வலி விதையை கிலோ ரூ.ஆயிரத்து 700க்கு கொள்முதல் செய்து வருகின்றனர். பணத்தேவை உள்ள விவசாயி கள் இந்த விலைக்கு கண்வலி விதையை விற்று வரு கின்றனர். இந்நிலையில் ரூ.ஆயிரத்து 700க்கு கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், இந்த வாரம் தான் இந்த விலை அடுத்தவாரம் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது எனக்கூறி விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் ரூ.ஆயி ரத்து 700க்கு விற்பதா அல்லது இருப்பு வைத்து நல்ல விலைக்கு விற்பதா என தெரியாமல் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சேவூரில் நிலக்கடலை ஏலம்
அவிநாசி, செப்.17- சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.15 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 700 மூட்டை நிலக்கடலை வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,200 வரை யிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ, 6,090 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம் போனது. இதில் 15வியாபாரிகள், 30 விவசாயிகள் பங்கேற்றனர்.
வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு இருவருக்கு 5 ஆண்டு சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம்
கோவை, செப்.17- சமூக சேவைக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இருவருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் ரீச் என்ற தனியார் சமூக சேவை நிறுவனம் செயல்பட்டு வந் தது. இதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அளிக்கப்பட்டது. 1992 முதல் 2002 ஆம் ஆண்டு வரை இவ்வமைப் பின் தலைவராக இருந்த மார்கோ, ஞானக்கண் என்ப வர் இருந்துள்ளனர். இந்த இவரும் இணைந்து வெளி நாட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற மூன்று கோடி ரூபாய் பணத்தை தங்களது சொந்த தேவைக்காக முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண் டது. இதில் இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணை கோவை நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் திங்களன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குழந்தைகள் கல்வி செலவிற்கு என பணம் பெற்று, அதனை முறைகேடாக பயன்படுத்திய மார்கோ மற் றும் ஞானக்கண் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி உத்தர விட்டார்.