இளம்பிள்ளையில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை
இளம்பிள்ளை, மே 11- சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட் களை விற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித் துள்ளனர். கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து ஊர டங்கு உத்தரவு உள்ள நிலையில் 45 நாட் களுக்கு மேலாக பொது மக்கள் அன்றாட அத்தி யாவசிய பொருட்கள் வாங்குவதில் மிகவும் சிரமப் பட்டு வந்தனர். மத்திய, மாநில அரசுகள் சில தளர் வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திங்களன்று சூப்பர் மார்க்கெட் கடையில் பொருட்கள் வாங்க கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனை பயன் படுத்திக் கொள்ளும் விதமாக இளம்பிள்ளை சந்தப் பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான உணவு பொருட் களை விற்பனை செய்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், உணவு பாது காப்பு துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து, இக்கடை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ள னர்.
சொந்த செலவில் ஊர் திரும்பிய தொழிலாளர்கள்
அவிநாசி, மே 11- அவிநாசி அருகே நியூ திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை உற்பத்திப் பூங்காவில் பணிபுரிந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த செலவில் சொந்த ஊர்களுக்கு ஞாயி றன்று அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், பின்னலாடை உற்பத்தி மையத்தின் துணை நகரமாக அவிநாசி அருகே நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா (நியூ திருப்பூர்) உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். பொது முடக்கம் காரணமாக இந்நிறுவனங்கள் இயங்காததால், பொருளாதார ரீதி யாக பாதிக்கப்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி புத னன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் நடத் திய பேச்சுவார்த்தையில், விரைவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரி வித்தனர். மேலும், தொழிலாளர்களும், தங்களது சொந்த செலவிலேயே, ஊர்களுக்கு செல்வதாகத் தெரிவித்த னர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் தலைமையில், அத்தொழிலாளர் களுக்கு சிறப்பு பயண அட்டை ஏற்பாடு செய்யப்பட்டு ஞாயிறன்று மாலை பெருமாநல்லூர் காவல் துறையின் சார்பில் இரு பேருந்துகளில் 60 தொழிலாளர்கள் பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒவ்வொரு பேருந்திலும் 30 பேர் வீதம், அவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளுடன், அவர்களது மாவட்டத்திற்கே பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விரைவில் மீதமுள்ள தொழிலாளர்களும் அனுப்பி வைக்கப்படும் என காவல் துறை சார் பில் தெரிவித்தனர். பல்வேறு பகுதி களில் தமிழக அரசு சார்பில், வெளி மாநிலத்திற்கு தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலை யில், நியூ திருப்பூர் பகுதியில் தொழி லாளர்கள் ஒவ்வொரும் ரூ.6, 500 செலுத்தி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.