tamilnadu

img

விவசாயிகளுக்கு விரோதமான திட்டத்தை கைவிடுக மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் வலியுறுத்தல்

 கோவை, செப்.19- விவசாயிகளுக்கு விரோதமான திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வலியுறுத்தியுள்ளார்.  திருப்பூர் மாவட்டம், குண்டடத் தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போரா டிய விவசாயிகள் சங்கத்தின் நிர் வாகிகள் 5 பேர் கைது செய்யப் பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் களை முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், சிங்கா நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் வியா ழனன்று சந்தித்து ஆதரவினை தெரிவித்தனர்.  இதனையடுத்து சுப்புலட்சுமி ஜெகதீசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயர் மின் அழுத்த கோபுரங்களை விவசாயிகளின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு அமைக்கக் கூடாது. ஏற்கனவே, அமைக்கப்பட்ட உயர் மின் வழித் தடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புதிதாக அமைக்கப்பட இருக்கும் உயர் மின் கோபுரங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை யில்லை. உயர் மின் கோபுரம், கெயில் போன்ற திட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற் படும்.  இந்த திட்டங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் எழுப்பும் என்றார்.  மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு 3  ஆண்டுகளுக்கு நடக்காது என கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் சொல்வது சந்தேகமாக உள் ளது. இதை மத்திய அரசு சொன்னா லாவது நம்பலாம், மாநில அரசு இதில் எந்தளவு உறுதியாக இருக் கும் என்பது தெரியவில்லை  என வும் அவர் குற்றம்சாட்டினார்.

;