tamilnadu

img

புதிய கல்விக்கொள்கை குறித்து சிறப்புக் கூட்டம்

ஈரோடு, ஆக.25- இந்திய மாணவர் சங்கம் பெருந்துறை தாலுகா கமிட்டி சார்பில், புதிய கல்விக்கொள்கை குறித்த சிறப்பு பேரவைக்கூட்டம் பெருந்துறையில் ஞாயி றன்று நடைபெற்றது. இதில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் சி.நவீன்குமார் தலைமை வகித்தார். மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் மா.வினிஷா, கோ.கோபிகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் பெருந் துறை தாலுகா செயலாளர் சி.அஜித்குமார், மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன், நிர்வாகி பூவரசன் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இக்கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தாலுகா தலைவராக பரத்குமார், செயலாளராக சி.நவீன்குமார் ஆகியோர் உட்பட 8 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும், 15 பேர் தாலுகா கமிட்டி உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.