tamilnadu

img

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட காவலாளி உடலைப் புதைத்து மறைத்த ஆறு பேர் கைது

திருப்பூர், டிச. 26 - திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை  செய்த தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்ப வத்தில் ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஆறு பேரை காவல் துறையினர் கைது செய் தனர். மேலும் கொலை செய்த கும்பல் யாருக்கும் தெரியாமல் இருக்க  உடலை தென்னந்தோப்பில் புதைத்த சம்பவமும் தெரிய வந்துள்ளது. உதகை அருகே குன்னூர் வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் கே.முருகேசன் (35).  திருப்பூர் திருமுருகன்பூண்டி அருகேயுள்ள அணைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் காவலாளி யாக வேலை செய்து வந்தார். அந்நிறுவ னத்தில் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த வரும் தற்போது திருமுருகன்பூண்டி துரை சாமி நகரில் வசித்து வந்தவருமான வி.உதய குமார் (36) என்பவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக வேலை செய்து வந்தார். ஒரே ஊர் என்பதால் உதயகுமாருக்கும் முருகேச னுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த நிறுவனத்தில் சமீப நாட்களாக பின்னலாடை தயாரிப்புக் குரிய துணி ரோல்கள், உற்பத்தி செய்யப் பட்ட பின்னலாடைகள் திருட்டு போவதாக புகார்கள் இருந்துள்ளன. கடந்த 24ஆம் தேதி இரவு முருகேசன், உதயகுமார் இரு வரும் கம்பெனிக்குச் சென்று பின்னலா டைகளை திருட முயன்றதாக கூறப்படு கிறது.

இதைப் பார்த்த பணியில் இருந்த இரவு  நேரக் காவலாளி நிறுவன நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு சென்ற நிறுவன நிர் வாகிகள் பலர் சேர்ந்து, முருகேசன் உட்பட இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது, இருவரையும் அவர்கள் குழாய்  மற்றும் மரக்கட்டை உள்ளிட்ட ஆயுதங் களால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த உதயகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தொடர் தாக்குத லால் படுகாயமடைந்த முருகேசன் 25ஆம்  தேதி காலை உயிரிழந்ததாக தெரியவந்தது. உதயகுமார் அளித்த தகவல் அடிப் படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்ற திருமுருகன்பூண்டி போலீஸார் விசாரணை நடத்தி கொலை வழக்குப் பதிவு செய்தனர். அதோடு நிறுவனத்தின் பொது மேலாளர் சுதன் மற்றும் சரவணக்குமார் ஆகிய இருவரை புதன்கிழமை கைது செய்தனர். அத்துடன் திருப்பூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ள உதயகுமார் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், பின்னலாடை நிறுவன பவர்டேபிள் டெய்லரான திருப்பூர்  அவிநாசி அருகேயுள்ள பழங்கரை ஸ்ரீராம் நகரை சேர்ந்த ஆர்.செந்தில்குமார் (37), சிறு பூலுவப்பட்டி திருஆவினன்குடி நகரை சேர்ந்த கே.சுதேசன் (37), நிறுவன மெர்ச்சண்டைசரான திருமுருகன்பூண்டி ஏவிபி லே-அவுட் பகுதியை சேர்ந்த எஸ்.அருண்குமார் (27), வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த வி.புருஷோத்தமன் (44)  மற்றும் நிறுவன மேலாளர்களான அவிநாசி  கருவலூரை சேர்ந்த பி.யுவராஜ் (35), கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த ஆர்.ரஜினி (44) ஆகிய 6 பேரை  போலீஸார் பிடித்து விசாரணை நடத் தினர்.

விசாரணைக்கு பிறகு அவர்கள் 6 பேரை யும் காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் துணை ஆணையர் வி. பத்ரி நாராயணன் மேற்பார்வையில் திரு முருகன்பூண்டி போலீஸார் வியாழக் கிழமை கைது செய்தனர்.  இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கும்பல் தாக்குதலில் முரு கேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த கும்பல், அதிர்ச்சியடைந்து யாருக்கும் தெரியாமல் சம்பவத்தை மறைக்க முடிவு செய்துள்ளனர். சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு யாருக்கும் தெரியாமல் உடலை மறைக்க  முடிவு செய்தனர். திட்டமிட்டு அருகே யுள்ள தென்னந்தோப்பில் குழி தோண்டி முருகேசனின் உடலைப் புதைத்து விட்டனர். அதன் பிறகே தகவல் தெரிந்து  அவரது உடல் மீட்கப்பட்டு, கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது, என்று காவல் துறையினர் தெரி வித்தனர்.

 

;