மதுரை மாவட்டம் களிமங்கலத்தில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக மதுரை வரிச்சியூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (28), பரமேஸ்வரன்(18), மகேஸ்வரன்(27), மற்றும் குன்னத்தூரைச் சேர்ந்த பாண்டி(33), லட்சுமிபதி ராஜன் (18), ராஜ்குமார் (19) ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்த புகாரை களிமங்கலத்தைச் சேர்ந்த ஆதம் ஆசிக் (18) என்பவர் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகாராளித்தாகவும் அதைத் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் இதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை ஆறு பேரை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.