பொதுமக்கள் மனு
அவிநாசி, பிப். 4- அவிநாசி அருகே மகாநகர் குடியிருப்பு பகுதிக்குள் சாக்கடை நீர் புகுந்ததால் அதை சீரமைக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாயன்று பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட் சிக்குட்பட்ட மகா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்ட சாக்கடையால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சாக்கடை நீர் புகுந்து விடுகிறது. இதனால் 2010 ஆம் வருடம் முதலே மழை காலங்களில், மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக அவிநாசி சட்டமன்ற தொகுதி உறுப் பினரான ப. தனபாலிடம் பலமுறை மனு அளித்தப் பொது மக்கள், மாவட்ட ஆட்சியரிடமும் தற்சமயத்தில் மனு அளித் துள்ளனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து எந்தவித பயனளிக்காத காரணத் தால் மீண்டும் அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை சந் தித்து மனுக்கள் அளித்தனர்.