tamilnadu

img

தரமில்லாத கிருமிநாசினி விற்றால் கடும் நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, மார்ச் 16 -  கிருமிநாசினி போது மான அளவு கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். அதிக  விலைக்கு விற்பது, தரமில் லாத கிருமிநாசினி விற்பது போன்றவை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட ஆட்சியர்  கு.ராசாமணி எச்சரித்துள் ளார். கோவை மாவட்ட  ஆட்சி யர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை யின் ஒருபகுதியாக ஆட்சியர் அலுவலக  வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக் கும் பணி திங்களன்று நடைபெற்றது.  மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும்  நிலையில் ஆட்சியர் அலுவலகம் வரக்கூடிய  பொது மக்களுக்கு கிருமிநாசினி மூலம்  கைகள் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப் பட்டது. அப்போது, ஆட்சியர் அலுவலக  வளாகம் மற்றும் வாகனங்களுக்கு கிருமிநா சினி தெளிக்கும் நடவடிக்கையினை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு செய் தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகை யில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவை மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.  விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள், உள்நாட்டு பயணிகள் சோத னைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கேரளா வில் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலை யில், மாநில எல்லையில் 8 இடங்களில்  சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளது. கோவை விமான நிலையம் அருகே  தனியார் கல்லூரி இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை  அளிக்க தனி இடம் தேர்வு செய்யப்பட்டுள் ளது. உடனடியாக அது செயல்பாட்டிற்கு வரும். இரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் கள் மாநில எல்லையில் உள்ள கல்லூரிக ளில் படிப்பதால் கல்லூரி நிர்வாகங்கள்  எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. கோவையில் உள்ள வணிக வளா கங்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது.  கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப் பட்ட 10 பேரில் 8 பேருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கான ரிசல்ட் இரு தினங்களில் வந்துவிடும். கிருமிநாசினி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும். அதிக விலைக்கு விற்பது, தரமில் லாத கிருமிநாசினி விற்பது போன்றவை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

;