கோபி, பிப்.28- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருந்தலையூ ரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாண விகளின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருந்தலையூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி மாணவர்களை ஊக்கப்ப டுத்தவும், மாணவர்களின் அறிவியல் திறனை வெளிக் கொண்டுவரவும் அறிவியல் கண்காட்சியை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விதவித மான அறிவியல் கண்டுபிடிப்பையும் புதிய தொழில்நுட்பத் தையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் காற்றாலை மூலம் இயங்கும் வாகனம், குறைந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மரத்தினாலான மிதிவண்டி, கையடக்கரோபோ, எளியமுறை மழைநீர் சேகரிப்பு, காற்றினால் தண்ணீரில் மிதக்கும் விசைப்படகு, சிறிய வடிவிலான பேட்டரி கார், காய்கறி மூலம் செய்யப் பட்ட கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புகள் காண்போரை கவர்ந்தது. இந்த அறிவியல் கண்காட்சியை பெற்றோர்க ளும், பொதுமக்களும் கண்டுகளித்து வியந்து மாணவ, மாண விகளை வெகுவாக பாராட்டினர்.