காவிரி, தென்பென்ணை ஆறுகளின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று தருமபுரியில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. சிபிஎம் மாவட்டசெயலாளர் ஏ.குமார் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.