அவிநாசி, ஜூலை 1- அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களிடம் சேர்க்கை கட்டணம் வசூலிப்பதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அவிநாசி அரசு கலைக்கல்லூரி 2017 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது புதுப்பொலிவுடன் அரசு கலைக்கல்லூரி கட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு காணொளிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அவிநாசி அரசு கலை கல்லூரிகளில் 6 பாடப்பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றன. இதில் முதலாமாண்டு சேர்க்கையில் 284 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் . இரண்டாம் ஆண்டு சேர்க்கை யில் 284 மாணவர்களும், மூன்றாம் ஆண்டு சேர்க்கை யில் 224 மாணவர்கள் என மொத்தம் 795 மாணவர் கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இக்கல் லூரியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாண வர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு கலை கல்லூரியின் நிர்வாகி களிடம் கேட்டபோது, அனைத்து மாணவர்களிடம் 2 ஆயிரத்து 470 ரூபாய் அடிப்படை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இதில் 470 ரூபாய் கல்லூரி பராமரிப்புக்காகவும், 2 ஆயிரம் ரூபாய் விளையாட்டு மற்றும் பல்வேறு உபகரணங்களுக்காக வசூலிக் கப்படுகிறது. இதையடுத்து எஸ்சி, எஸ்டி மாணவர்க ளுக்கு கட்டணத்தில் சலுகை இல்லையா என கேள்வி எழுப்புகையில், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நிலையான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம், கல்லூரி சேர்க்கை படிவ கட்டணத்தில் மட்டும் சலுகை காட்டப்படுகிறது. மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடம் சேர்க்கை யின்போது ரூ. 200 மட்டும்தான் கட்டணம் வசூலிக் கப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒன்றிய தலைவர் முருகேசு ,ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கூறுகையில், அரசாணை எண் 92 அடிப்படையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆனால், இதற்கு மாறாக அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் கட்டணம் வசூலிப்பதாக தெரிகின்றது. இதை முழுமையாக ரத்து செய்து, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவசமான கல்வி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.