tamilnadu

சத்தியமங்கலம், பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

ஈரோடு, ஏப். 21-சத்தியமங்கலம், பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சத்தியமங்கலம் அரசுகலைக் கல்லூரியில் பி.காம் (பொருளியல்), பி.ஏ(ஆங்கிலம்), பி.பி.ஏ, பி.எஸ்சி (கணிதம்), பி.எஸ்சி (கணினி அறிவியல்), பி.சி.ஏ, பி.எஸ்சி (விஷுவல் கம்யூனிகேஷன்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22 ஆம்தேதி காலை 10 மணி முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.50- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் சாதிச் சான்று நகலை காண்பித்து பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 6 ஆம் தேதிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசைப்பட்டியல் மே 10 ஆம் தேதி வெளியிடப்பட்டு, மே 20, 21 ஆம் தேதிகளில்முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி


பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவை பாரதியார்பல்கலைக்கழக அரசு உறுப்புக் கல்லூரி கடந்த இரண்டுஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு பிபிஏ, பி.காம் சிஏ, பி.காம் பிஏ, பிஎஸ்சி கணிதம் மற்றும் பிஏ ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 60 பேர் வீதம் 300 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


;