கிருஷ்ணகிரி, மார்ச் 15- ஊத்தங்கரையில் அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊத்தங்கரை வட்டத்தில் வாலிபர் சங்க அமைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன் தலைமை யில் நடைபெற்றது. சங்கர் வரவேற்றார். விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அண்ணாமலை வாழ்த்திப் பேசினார். ஊத்தங்கரை வட்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், வட்ட அரசு மருத்துவமனையை மக்கள் தொகைக்கு ஏற்ப நவீன ரத்தப் பரிசோதனை கூடம், எக்ஸ்ரே, ஆய்வகம், தேவைக்கேற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும், 12 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி யளிக்கும் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணி களை விரைந்து முடிக்க வேண்டும், ஊத்தங்கரை சிப்காட்டில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சத்தியமூர்த்தி, ஹரிஷ், கோகுல், அருள், மோகன், இளங்கோ, கோகுல்ராம், திருமலை, ஹரிஹரன் ஆகியோர் கொண்ட அமைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது.