நாமக்கல், ஆக.5- மோட்டார் வாகன சட்டத் திருத் தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென சிஐடியு நாமக்கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) நாமக்கல் மாவட்ட 7 ஆவது மாநாடு கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்கள் ராசிபுரத்தில் தோழர் எஸ்.கே.சேஷாசலம், தோழர் எஸ்.முத்துக்குமார் நினைவரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி.சிங்காரம் தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, மத்திய பாஜக அரசு நிறைவேற்றி யுள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். பள்ளிபாளையம், குமாரபாளையம், வெப்படை ஆகிய பகுதிகளில் விசைத் தறி தொழிலில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் குடிநீர், கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், பண்டிகை கால விடுமுறை உள்ளிட்ட சட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டம் முழுவதும் நிலவும் கந்துவட்டி கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி பாளையம், குமாரபாளையம் பகுதி களில் இயங்கும் சாயப்பட்டறைகளின் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்திட சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைத்திடவேண்டும். விசைத்தறி தொழிலுக்கு ஆயிரம் யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்க வேண் டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை யில் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் ரூ.380ஐ மின் வாரிய தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். பஞ்சாலைகளில் சுமங் கலித் திட்டம், திருமகள் திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி சட்டச் சலுகை கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் மாவட்ட தலைவராக பி.சிங்காரம், மாவட்ட செயலாளராக ந.வேலுசாமி, மாவட்ட பொருளாள ராக ஏ.கே.சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர்களாக எம்.அசோ கன், எல்.ஜெயக்கொடி, எம்.ரங்கசாமி, எம்.செங்கோடன், எஸ் கோவிந்த ராஜ், எஸ்.தனபால், துணை செயலா ளர்களாக கே.சிவராஜ், கே.மோகன், எஸ். முத்துக்குமார், வி. கண்ணன், எம்.பூங்கொடி, கே. ஜெயராமன் உள்பட 32 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ். சுப்ரமணியன் நிறைவுரை ஆற்றினார்.