tamilnadu

img

பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தருமபுரி, ஜன. 29- இந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவாடி கிரா மத்தில் அதிகாரிகளை முற்றுகை யிட்டு பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், சிவாடி கிராமத் தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்களில் பெரும்பால னோர் தலித் சமூகத்தைச் சேர்ந்த வர்களாகவர்கள். இவர்கள் சிறு குறு விவசாயிகள். அரை ஏக்கர்  முதல் 2 ஏக்கர் வரை நிலத்தை  வைத்து தங்களது வாழ்வாதா ரத்தை நகர்த்சி வருகின்றனர். இந்நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேசன் லிமி டெட் (எச்.சி.எல்) நிறுவனம்  ரூ. 1813 கோடியில் சிவாடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இவை அமைக்கப்பட்டால் சொந்த ஊரிலேயே இம்மக்கள் அகதிகளாக மாற்றப்படுவார்கள். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும். ஆகவே, இந்த மக்களை சொந்த நிலத்தில் இருந்து வெளி யேற்றும் முயற்சியை அரசு கை விட வேண்டும். சிவாடி மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும்  (எச்.சி.எல்) இந்துஸ்தான் பெட் ரோலியம் கார்ப்ரேசன் லிமி டெட், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் புதனன்று சிவாடி கிராமத்தில் பெட்ரோலி யம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் ராஜசேகர்,தருமபுரி டிஎஸ்பி ,ராஜ்குமார் காவல்ஆய்வாளர்கள் ராஜேஸ்,சர்மிளா பானு உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட காவ லர்கள் குவிந்தனர். இதனால் அப்ப குதி விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டது.  இதனையடுத்து வந்திருந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகா ரிகள் விவசாய நிலத்தை அள வீடு செய்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்த  விவசாயிகள் திரண்டு வந்து நிலம் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைய டுத்து காவலர்கள், விவசாயி களை தாக்கியதால் பெரும் பரப ரப்பு ஏற்பட்டது. இதைத்தொ டர்ந்து சிவாடி கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ரமேஷ், சிவகுரு, முத்து ஆகி யோர் நிலம் அளவீடு செய்வ தற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகா ரிகளை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர் .மாவட்ட நிர்வாக மும், தமிழக அரசும் தலையிட்டு சிவாடி கிராமத்தில் பெட்ரோ லியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதன்காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

;