tamilnadu

img

குடிநீர் வழங்கக் கோரிக்கை

சீர்காழி, ஜூன் 27- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து கிராமங்களுக்கும் போர்கால அடிப்படையில் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கடும் வறட்சி நிலவி வருவதால் நூறு நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி சட்டக்கூலி ரூ.229 வீதம் வழங்க வேண் டும். ஊரக வளர்ச்சித்துறை இயக்கு நரகம் அறிவித்துள்ள தேர்தல் நாளன்று விடுப்புடன் கூடிய சம்ப ளத்தை ஊரக வளர்ச்சி திட்ட பயனாளி கள் அனைவருக்கும் வழங்க வேண் டும். டெல்டா மாவட்டங்களை பாலை வனமாக மாற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  வட்டத்தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர்கள் அய்யாசாமி, பாஸ்கர், மாதர் சங்க வட்டச் செயலாளர் இந்திரா காந்தி, வட்டத் தலைவர் விசாலாட்சி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜீவானந்தம் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார். வட்டத் துணைச் செயலாளர் பாக்ய ராஜ், வட்டக்குழு உறுப்பினர் விஜய் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஒன்றிய ஆணையரை சந் தித்து கொடுத்தனர்.

;