திருப்பூர், மே 31 - உடுமலை ஒன்றியம், அமாராவதி அணைக்கு கிழ புறம் கரட்டுபதி மலைமக்கள் குடியிருப்பில் ஐம்பது குடும் பங்கள் வாழ்ந்து வருகின் றனர். இப்பகுதிக்கு குடி நீர் வராமல் பெரிதும் சிரமப் படுகின்றனர். இது குறித்து பல மாதங் களாக அதிகாரிகளிடம் தெரி வித்தும் இப்பகுதிக்குக் குடிநீர் கிடைக்காமல் உள்ளது. இந்த குடியிருப்பில் மேல்நிலை தொட்டி உள்ளது பொது குழாய்கள் உள்ளது. குடிநீர் திட்டத்திற்கு அமைத்த குழாய் பாதையும் உள்ளது. எல்லாம் இருந் தும் ஏழை மலைவாழ் மக்களாக இருப்ப தால் இவர்களுக்கு குடிநீர் வழங்க அரசு அதி காரிகளுக்கு மனம் மட்டும் இல்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உடுமலை ஒன்றிய அதிகாரிகள் இந்த மலைமக்களை மனிதர்களாக ஏற்று கொள்வதில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகமும் இவர்கள் பகுதியை புறக்கணிப்பு செய்கின்றது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மலை வாழ் மக்களுக்கு குடிநீர் கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.