tamilnadu

img

சிபிஎம் சார்பில் நீலகிரிக்கு நிவாரணப்பொருட்கள் ஜி.ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கோவை, ஆக. 21 –  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் நிவாரண பொருட்களை புதனன்று அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தமிழகத் தின் நீலகிரி மாவட்டம் பெரும்  பாதிப்பிற்குள்ளானது. அங்குள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தும், உடமை களை இழந்தும் முகாமில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ள நிலையில் இம்மக் களுக்கு ஆதரவு கரம் நீட்டும் பொருட்டு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண பொருட் களை அனுப்பிவைத்து வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை யில் இருந்தும் தொடர்ந்து நிவா ரண பொருட்கள் அனுப்பி வைக் கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவல கத்தில் இருந்து சுமார் ரூ.2 லட் சம் மதிப்பிலான புத்தாடைகளை நீலகிரிக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடிய சைத்து துவக்கிவைத்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன் மற்றும் சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் யு.கே.வெள் ளிங்கிரி உள்ளிட்ட கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;