கோவை, அக்.5- கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் வெள்ளியன்று வெளியிடப்பட்டது. இதன் படி மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சத்து 99 ஆயிரத்து 422 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் மற்றும் துணைப் பட்டியல் 1, 2 ஐ அடிப் படையாகக் கொண்டு உள்ளாட்சித் தேர்த லுக்கான வாக்காளர் பட்டியல் வெளியி டப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் 93 ஆயிரத்து 588 ஆண்கள், 97 ஆயிரத்து 890 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 13 என 1 லட்சத்து 91 ஆயிரத்து 491 வாக்காளர்கள் உள்ள னர். 37 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 344 ஆண்கள், 2 லட்சத்து 88 ஆயிரத்து 746 பெண்கள், 76 மூன்றாம் பாலி னத்தவர் என மொத்தம் 5 லட்சத்து 65 ஆயி ரத்து 166 வாக்காளர்கள் உள்ளனர். 12 ஊராட்சி ஒன்றியங்களில் 4 லட்சத்து 36 ஆயி ரத்து 409 ஆண்கள், 4 லட்சத்து 57ஆயி ரத்து 158 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 77 என மொத்தம் 8 லட்சத்து 93 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை மாநகராட்சி
இதேபோல், கோவை மாநகராட்சியில் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டி யலை, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் வெளியிட்டார். இதில், கோவை மாநகராட்சியில் 6 சட்டமன்ற தொகுதிகளும், 100 வார்டுகளும், 1,216 வாக்குச் சாவடிகளும் உள்ளன. கோவை மாநகராட்சியில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 42 ஆயிரத்து 107. இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட் சத்து 26 ஆயிரத்து 176, பெண் வாக்காளர் கள் 7 லட்சத்து 15 ஆயிரத்து 724. மூன்றாம் பாலினத்தவர் 207 பேர் உள்ளனர். மாந ராட்சி வடக்கு மண்டலத்தில் 195 வாக்குச் சாவடி மையங்களும், கிழக்கு மண்டலத்தில் 213 வாக்குச்சாவடி மையங்களும், தெற்கு மண்டலத்தில் 236 வாக்குச்சாவடி மையங் களும், மேற்குமண்டலத்தில் 246 வாக்குச் சாவடி மையங்களும், மத்திய மண்டலத் தில் 326 வாக்குச்சாவசடி மையங்களும் உள்ளன என தெரிவித்தார்.