tamilnadu

img

சாலை வசதி ஏற்படுத்தி தர ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை மனு

அவிநாசி, ஜூன் 14- அவிநாசி அருகே கருமா பாளையத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தர வெள்ளி யன்று அப்பகுதி மக்கள்  ஜமாபந்தியில் கோரிக்கை  மனு அளித்தனர்.  இதுகுறித்து அப்பகுதி  மக்கள் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது, அவி நாசி ஒன்றியம், கருமா பாளையம், வேட்டுவபாளையம் ஆகிய  இரு ஊராட்சிகளுக்கு உட்பட்ட  முத்தம்மாள் நகர், மேஸ்திரி நகர், சிறு தொழில் பேட்டை ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றோம். நாங்கள் கருமாபாளையம்-ஆலாக்காட்டுபாளையம் மண் சாலையை பிரதான பொதுவழித் தடமாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த  நிலையில், இரு தனியார் நில உரிமை யாளர்கள், இப்பொதுவழி தடத்தை தங்களு டையது எனக்கூறி அரசுக்கு ஒப்படைக் காமல் இருந்து வந்தனர்.  இதையடுத்து தொடர் போராட்டத்திற்கு பிறகு வேட்டுவபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் நில உரிமையாளர்கள் மட்டும் பொதுவழித் தடத்தை அரசுக்கு ஒப்படைத்து விட்டார்.  ஆனால், கருமாபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் நில உரிமை யாளர்கள் ஆவணத்தில் உள்ளவாறு நிலத் தை இன்னமும் அரசுக்கு ஒப்படைக்காமல் உள்ளார்.  இதனால் இப்பகுதியில் சாக்கடை வசதி,  சாலை வசதி, தெருவிளக்கு உள்ள எவ்வித அடிப்படை வசதியும் இன்றி கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதாரக் சீர்கேடு  ஏற்பட்டு  அவதிக்குள்ளாகி வருகின்றோம்.  எனவே இப்பகுதியில் உடனடியாக ஆய்வு  மேற்கொண்டு இரு ஊராட்சிகளின் இணைப்புச் சாலையை உறுதிப்படுத்தியும், அடிப்படை  வசதிகள் ஏற்படுத்தித் தர  வேண்டும் எனவும் அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.