tamilnadu

img

ஏரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

பென்னாகரம், ஆக.5- பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட்சி மடம் கிராமத்தில் உள்ள சின்ன ஏரியை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப் பாடி ஊராட்சி மடம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியும், விவ சாயக் கூலித் தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள சின்ன ஏரியில் மழைக்காலங்களில் வரும் நீர் ஏரியில் தேங்கி நின்று நிலத்தடி நீரை உயர்த்துவதோடு விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருந்து வந்தது. தற்போது இந்த ஏரி புதர் மண்டி கிடப்பதோடு மட்டுமல்லாமல் ஏரியின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி ஏரியை தூர்வார வேண்டும். மழைக்காலங்களில் இந்த  ஏரியில் தண்ணீர் நிற்க முழு ஏற்பாட்டையும் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் இந்த ஏரியை தூர் வாருவதற்கான நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த ஏரியின் பரப்பை முறை யாக சர்வே செய்து கொடுத்தால் மட்டுமே அந்த நிதி ஒதுக்கீடு செய்து இந்த கிராம மக்களுக்கு 100 நாள் பணி வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரி விக்கின்றனர். எனவே இந்த ஏரியை சர்வே செய்வதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;