தருமபுரி, நவ.19- அரூரை அடுத்த எல்லப்புடையாம் பட்டியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வார வேண்டுமென விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சிக்குட்பட்டது மொல்லன் ஏரி. இந்த ஏரியானது சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு வள்ளி மதுரை, வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்வரத்துக்கான கால்வாய் வசதி உள்ளது. இந்த ஏரியில் நீர் நிரம்பினால் சுமார் 200 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல், எல்லப்புடை யாம்பட்டி, கௌப்பாறை கிராமப் பகுதியி லுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஆதார மாகவும் விளங்குகிறது. இந்நிலையில் ஏரியின் அருகில் உள்ள விவசாயிகள் சிலர் ஏரியின் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக அந்தப் பகுதியிலுள்ள பொது மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல், குடிமராமத்து திட்டத்தின் கீழ் மொல்லன் ஏரி மற்றும் ஏரிக்கான நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.