தருமபுரி, பிப்.27- கால்நடை தீவனங்கள் மானிய விலையில் வழங்குமாறு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தருமபுரி மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர் சங்க மாவட்ட பொதுக் குழு கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் வியாழ னன்று மாவட்ட கெளரவ தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சி.பச்சியப்பன் வரவேற் றார். இக்கூட்டத்தில் பால் உற் பத்தியாளர்களுக்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை அல்லது புதன் கிழமைக்குள் சங்கங்களுக்கு பணம் வழங்கவேண்டும். கூட்டுறவு சங்க கங்களை விட தனியார் நிறுவ னங்கள் பாலை அதிகவிலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் கூட்டுறவு சங்கங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலில் கொழுப்பு சத்து அளவு குறைத்து கணக்கிடப் படுகிறது. எனவே தனியார் நிறு வனங்களை கொள்முதல் விலையை முறை படுத்த வேண்டும். ஒன்றியத் திலிருந்து சங்கங்களுக்கு வழங்கப் பட்ட பால் பரிசோதனை கருவிகள் 90 சதவிகிதம் பழுதடைந் துவிட்டது. எனவே 100 சத மானிய விலையில் பால் பரிசோதனை கருவி வழங்க வேண்டும். மேலும் சங்கங்களுக்கு வழங்கப் படும் கால்நடை தீவனத்தை தேவைக்கேற்ப கால இடைவெளி யின்றி வழங்கவேண்டும். பால் வழித்தடத்துக்கு கால்நடை மருத்து வர்கள் சரியாக வருவதில்லை எனவே கால்நடை மருத்துவர்கள் ,சங்கங்களுக்கு வர அறிவுறுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 மானியம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டுமென என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஆர்.நாகராஜன், மாவட்டச் செயலாளர் கே.சி.தங்க வேல், மாவட்ட பொருளாளர் கே. முருகேசன் மற்றும் நிர்வாகிகள் எம்.சக்திவேல், ஏ.கணேசன், பி.குமார், வி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.