tamilnadu

img

மாவட்ட நிர்வாகத்தின் தடை விதிப்புக்கு எதிராக வெள்ளகோவிலில் தனியார் குடிநீர் லாரிகள் நிறுத்தம்

திருப்பூர், ஜூன் 23 - திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரத்தில் தனியார் குடிநீர் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறை இன்றி நிறுத்தப்பட்டன. கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு இருக் கும் நிலையில் விவசாயத் தோட்டக் கிணறுகளில் இருந்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் ஏற்றம் செய்து விற்பனை செய்யப்படுவதால் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் கூறினர். தனியார் குடிநீர் லாரிகளை தடை செய்ய  வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலை யில் பல்வேறு பகுதிகளில் தனியார் குடி நீர் லாரிகள் விவசாயத் தோட்டக் கிணறு களில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு லாரிகள் மூலம் குடிநீர் விற் பனை செய்வதை தடுத்திட தாராபுரம் சார் ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. இதன்படி வெள்ளகோவில் அருகே குடிநீர் எடுத்துச் சென்ற தனியார் லாரிகள் உள்ளிட்ட மூன்று வாகனங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்ற நடவ டிக்கைகளைத் தொடரவும் அரசு நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளகோவிலில் உள்ள 60க்கும் மேற்பட்ட தனியார் குடிநீர் லாரிகள், டிராக்டர்கள், டெம்போக்கள் ஞாயிறன்று நிறுத்தப்பட்டன. குடிநீர் லாரி உரிமையாளர்களிடம் இது குறித்து கேட்டபோது, குடிநீர் எடுக்க தடை விதிக் கப்பட்ட நிலையில் மூன்று வாகனங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய் திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பறி முதல் செய்யப்பட்ட வாகனங்களை விடு விக்க வலியுறுத்தியும், குடிநீர் லாரிகளை தொடர்ந்து இயக்க அனுமதிக்க வலியு றுத்தியும் மொத்தமாக குடிநீர் லாரிகளை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

பொதுவாக குடியிருப்புகளுக்குத்தான் குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகிறோம். அப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், லாரி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டால் அங்கும் மக்களுக்குப் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படுகிறது.  விவசாயக் கிணறுகளில் இருந்து தண் ணீர் எடுத்து குடிநீருக்கு விற்பனை செய் வது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தற்போதைய வறட்சி நிலையில் லாரிகளை நிறுத்துவதால் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அவர்களிடமும் அதி ருப்தி அதிகரிக்கும் நிலையில் தண்ணீர் லாரிகளை அனுமதிக்க கோரிக்கை உரு வாகும் என்று தனியார் நிறுவனத்தினர் கூறுகின்றனர். அதேசமயம் தனியார் லாரிகள் தண்ணீர் விற்பனை செய்வதைத் தடுப்பதுடன், அனைத்துப் பகுதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் சீராக குடிநீர் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதன் மூலமே குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். பிரச் சனை தலை தூக்கும்போது கண் துடைப் புக்கு ஏதேனும் நடவடிக்கை எடுப்பது என்ற அடிப்படையில் அரசும், மாவட்ட நிர்வாக மும் செயல்படுவது குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க உதவாது. மாறாக, இருக்கும் பிரச் சனையை இன்னும் குழப்புவதற்கே வழி செய்யும் என்றும் சமூக நோக்கர்கள் கூறுகின்றனர். எனவே நீராதாரம் உள்ள  பகுதிகளில் இருந்து அனைத்து மக்க ளுக்கும் குறைந்தபட்ச குடிநீர் கிடைப் பதற்கான வழிவகைகளை மாவட்ட நிர்வாகம் ஆராய்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.