tamilnadu

img

ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு நிரந்திர பணியில் முன்னுரிமை சிஐடியு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ. 16– கோவை மாநகராட்சி யில் காலி துப்புரவு பணியி டங்களை ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றும் ஊழியர்களை கொண்டு நிரப்ப வலியுறுத்தி கோவை யில் சனியன்று சிஐடியு  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின்  சார்பில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  கோவை மாநகராட்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியில் சுமார் பத்தாண்டுகள் வரையிலும் அத்தக்கூலிகளாக பணி யாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணி யாளர்களுக்கான 549 இடங்கள் நிரப்பப் பட உள்ளது. இப்பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களாக உள்ள ஆண், பெண்  தொழிலாளர்களை கொண்டு நிரப்பி நியாயம் வழங்க வேண்டும் என்கிற கோரிக் கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   கோவை தெற்கு தாலுகா அலுவலகம்  முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர்  ராஜாகனி தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்ட  பொருளாளர் ஆர்.வேலுசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் அருணகிரிநாதன் ஆகி யோர் உரையாற்றினர். நிறைவாக ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் கே.ரத்தின குமார் கோரிக்கைகள் விளக்கி நிறைவுரை யாற்றினார். இதில் ஏராளமான துப்புரவு  தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.

;