தஞ்சாவூர், ஆக.7- தமிழக முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் விதமாக விடுமுறை நாளில் ஆர்ப்பா ட்டம் நடத்திய, சத்துணவு ஊழியர்களின் சம்ப ளத்தை தமிழக அரசு பிடித்தம் செய்ய உத்தர விட்டுள்ளது. தொழிற்சங்க உரிமைகளை பறிக்கக்கூ டிய ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்தும், சம்பள பிடித்தம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி தமி ழகம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை மதிய உணவு இடை வேளை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், பாபநாசம், கும்ப கோணம் உள்ளிட்ட 10 இடங்களில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. தஞ்சையில் வடக்கு வட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் சிறப்புரை யாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் கோதண்டபாணி கண்டன உரையாற்றி னார். வட்ட இணைச் செயலாளர் மதியழகன் நன்றி கூறினார். அனைத்துத் துறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.