கோவை, ஜூலை 8– தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி திங்களன்று சிஐடியு உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. துப்புரவு பணிகளை தனி யாருக்குக் கொடுப்பதைக் கண் டித்தும், மக்கள் தொகை வளர்ச் சிக்கேற்ப கூடுதல் துப்புரவு பணி யாளர்களை நியமிக்க வேண்டும், காலிப்பணியிடங்கள் அனைத் தையும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியில் ஈடுபடும் தொழிலா ளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மலக்குழி மரணங் களை தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். ஓய்வுபெற்ற பணி யாளர்களுக்கு அரசாணை 348ஐ அமலாக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி கணி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து சங்கத் தின் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார் உரையாற்றினார். சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி ஜோதிகுமார் ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர். சங்கத்தின் நிர்வாகிகள் கணேசன், கனக ராஜ், காத்தவராயன் உள்ளிட்ட கோவை மாநகராட்சி, மேட்டுப் பாளையம், பொள்ளாச்சி, வால் பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு, சூரம்பட்டி நால் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத் துக்கு சங்க பொதுச் செயலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்ரமணி யன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத் தில் துப்புரவு பணியை தனி யார்மயமாக்கக் கூடாது, மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் துப்பு ரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். குறைந்தபட்ச கூலி அரசாணைப்படி சம்பளம் கொடுக்க வேண்டும். தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.